Sunday, May 11, 2014

குழந்தைப் பெயர் வழிகாட்டி (Baby name guide)




பாரம்பரிய இந்திய குடும்பங்களில் குழந்தைகளுக்கு, குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

உதாரணத்திற்கு, கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தது எனில் அதற்கு உகந்த எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸூ ஆகும். எனவே பெயரை கோபால் அல்லது ஸாகர் என்பது போல வைக்க வேண்டும்.



நட்சத்திரம்தமிழ் எழுத்துக்கள்English Letter
அசுபதிசு, சே, சோ, லCHU,CHEY,CHO,LA
பரணிலி, லு, லே, லோLI,LU,LEY,LO
கிருத்திகைஅ, இ, உ, எAO,Ee,UO,A
ரோகிணிஒ, வ, வி, வுO,VA,VEE,VOO
மிருகசீரிஷம்வே, வோ, கா, கிVAY,VO,KAA,KE
திருவாதிரைகு, க, ச, ஞKOO,GHAA,JNA,CHA
புனர்பூசம்கே, கோ, ஹ, ஹிKAY,KO,HAA,HEE
பூசம்ஹூ, ஹே, ஹோ, டHOO,HAY,HO,DAA
ஆயில்பம்டி, டு, டே, டோDEE,DOO,DAY,DO
மகம்ம, மி, மு, மெMAA,MEE,MOO,MAY
பூரம்மோ, ட, டி, டுMO,TAA,TEE,TOO
உத்திரம்டே, டோ, ப, பிTAY,TO,PAA,PEE
அஸ்தம்பூ, ஷ, ந, டPU,SHAA,NAA,THA
சித்திரைபே, போ, ர, ரிPAY,PO,RAA,REE
சுவாதிரு, ரே, ரோ, தRU,RAY,RO,TAA
விசாகம்தி, து, தே, தோTHEE,THOO,TAHY,THO
அனுஷம்ந, நி, நு, நேNA,NEE,NOO,NAY
கேட்டைநோ, ய, இ, பூNO,YAA,YEE,YOO
மூலம்யே, யோ, ப, பிYAY,YO,BAA,BEE
பூராடம்பூ, த, ப, டாBU,DHAA,BHA,DHA
உத்திராடம்பே, போ, ஜ, ஜிBAY,BO,JAA,JEE
திருவோணம்ஜூ, ஜே, ஜோ, காJU,JAY,JO,GHA
அவிட்டம்க, கீ, கு, கூGAA,GEE,GOO,GAY
சதயம்கோ, ஸ, ஸீ, ஸூGO,SAA,SEE,SOO
பூரட்டாதிஸே, ஸோ, தா, தீSAY,SO,DAA,DEE
உத்திரட்டாதிது, ச, ஸ்ரீ, ஞDHU,THA,SA,GHEE
ரேவதிதே , தோ, ச, சிDE,DO,CHAA,CHEE

கணிதப் பஞ்சாங்கம் (Panchangam)



பஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் ன்றால் ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக்காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.